Wednesday, January 7, 2009

3. சற்குரு

பருப்பொருளில் உறங்கும்மெய்க் குருப்பொருள்தான் விழிக்கும்!

அருட்பொருளாந் தன்னம்மை பரம்பொருளாந்தன் தந்தை

இருவரையுந் தன்னகத்துள் பழம்பொருளாய்த்தான் தெளியும்!

இருள்விடிய இப்புவியில் நவயுகத்தை எழுப்பும்!சிவமே பொருளெனச் சித்தந் தெருட்டி

தவமேன் மலைமேல் என்னை ஏற்றிஎன்

அவஞ்சேர் இருவினை எல்லாங் கரைத்து

நவமாய் ஒளிர்மெய் தந்தார் சற்குரு!அக்குருவும் இக்குருவும் எக்குருவுஞ் சாராமல்

''க்குருவாய் உம்மில்வாழ் மெய்க்குருவைச் சார்வீரே!

பொய்க்குருமார் மடஞ்சேர்ந்து கண்ணிழந்தே வீழாமல்

மெய்யுடம்பாம் மடத்துள்ளே சற்குருவைச் சேர்ந்துய்வீர்!

(தமிழுக்கே உரித்தான ''கரச் சுட்டு ம்முள்ளேயே றையும் த்தம மெய்க்குருவைச் சுட்டுகிறது!)அல்லாவுள் அ'ரு'ளம்மை அடக்கம்! அ'ரு'ளம்மை

அல்லாவின் நல்லாக்கம்! அ'ரு'ளே நின்வடிவம்!

அல்லாவே நின்மூலம்! இருவரும் ஒன்றிடும்நின்

இல்லாகும் இருதயமே நாயக நபிமையம்!இடவலமும் முன்பின்னும் மேல்கீழும் இருமையெலாம்

இருதயத்தே ஒன்றுவித்து நடுநிலையாய் இருக்குமொரு

குருமெய்யுள் ஒன்றிநின்று படுகுழியுள் வீழாமல்

குமரராய் என்றென்றும் இன்புற்று வாழ்வீரே!இருக்கும் இடத்திலேயே சற்குரு நாயகர்!

இல்லாம் உளத்தேதான் அமர்ந்தொளிர் ஜோதியர்!

உடம்பாம் கடத்திலேயே நல்லருட் போதகர்!

உள்ளே புகுந்தாலே துரிசறு தூயவர்!பெருமடத்தால் மெய்த்திருமடம் விட்டெங்கும் அலைந்தே

கருமனத்தை வெளுக்காமல் செத்தொழியுங் கூட்டம்!

ஒருமையுடன் மெய்ம்மடத்துள் நற்றவமா மலைமேல்

குருவாய்மை உணர்ந்தேநீ என்றென்றும் வாழ்க!இடத்தே சத்தியும் வலத்தே சிவமும்

கடத்தே கண்டு சிரத்தே இருவரும்

ஒன்றும் தலத்தைத் தாண்டி ஏழ்நிலை

வென்ற தவத்தை அளித்ததே குருவருள்!திடமெய்யைக் கரைக்குந் திரவமான அருவகுரு

திடமெய்யாய் உறைவார் உருவத்துள் தான்ஒளிந்தே!

மனமினிக்க உரைப்பார் மெய்ஞ்ஞானத் திருமந்திரம்!

மனமடங்கிக் கரையுதே மெய்குருவருட் கிருபையால்!

2. அருட்தந்தை

தாய்மையுள் தந்தையும் தந்தையுள் தாய்மையும்

சேர்ந்திருக்கும் வாய்மையை சிந்தையுள் என்றும்கொள்!

மாய்ந்திடும்மா மாயையும் நின்னுடம்பும் பொன்போல்ஆம்!

சார்ந்திருக்கும் ஒருமையே மெய்யென்னும் மாயாநிலை!சிவத்துள் சத்தி அடக்கம்! அருட்சத்தி

சிவத்தின் ஆக்கம்! சத்தியே நின்வடிவம்!

சிவம்நின் மூலம்! சத்திசிவ ஐக்கியமறி

தவத்தில் மூல கணபதியாம் குருமையம்!சுத்த சிவத்தை பூமித்தாய் தன்னுள்

சத்தாய்த் தவத்தே தேடித்தான் கண்டாள்!

சித்தந் தெளிந்தே அருள்விளங்கி நின்றாள்!

புத்தம் புதிதாம் யுகமாற்றங் கொண்டாள்!வெட்டவெளி சிவத்துள் கொட்டும் அருட்சத்தி!

உள்ளகத்தே தவத்துள் கிட்டும் இவர்உண்மை!

சத்தியைப் பற்றியே எட்டு நீசிவத்தை!

மண்ணிலே உற்றுநீ நாட்டு நாயகத்தை!

1. அருட்தாய்(நவயுக உதயம்!)

பருப்பொருளில் உறங்கும் அருட்தாய் விழித்தாள்!

அருட்பொருளாய்த் தன்னை முழுதாய் அறிந்தாள்!

அரும்பொருளாம் பரம்பொருள் தன்னுள் உணர்ந்தாள்!

திருப்பொருளாய்த் தன்னை உலகோர்க் களித்தாள்!

(நம் தாள் தொட்டு அன்னை பூமியில் இறங்குது நவயுக உதயம் இன்று! இவ்வதிசயம் சொல்லுது இக்கணினித் தாள்! குரு வள்ளல் தம் தாள் நமக்குத் தந்தாரே! சிரம் முதல் தாள் வரை ஆறாதாரத்தே பூரணமாய் ஒன்றியதே நிராதார மேனிலை! என் கரங்களின் தாளாண்மையால்-தட்டச்சும் முயற்சி- தாள் பற்றியக் கவியேந்தி கணினி வெண் தாள் கருக்குது!)மண்ணில் இறங்கிய விண்ணின் இரக்கம்

மண்ணைப் பொன்னாய் மாற்றுது இன்றே!

பெண்ணின் பெருமை உயிர்க்கும் உலகில்

ஆண்மை வணங்கும் தன்னுட் தாய்மை!ஒளிவுருவம் தாளிறங்கிப் பூமியுள் பொழியும்!

ஒளிந்திருக்கும் மூவரையும் பாருள் காட்டும்!

தெளிந்திருக்கும் எழுபடிக்கீழ் தாய்மை விழிக்கும்!

துளிர்த்திருக்கும் நவயுகத்தின் வாய்மை விளங்கும்!மெய்வழிச் சாலை தாள்கீழ் பூமிக்குள்

உய்ந்தருட் பாலை வார்த்தே தாயவளை

எழுப்பி இன்பம் சேர்த்தது! மாயாநிலை

தழுவி அன்னை விழித்தாள் நவயுகத்தில்!பராபரத்தின் இரக்கம் தராதலத்துள் உய்ந்தது!

சிராதாரம் இறங்கி அறுபடியுங் கடந்து

பாருக்குள் புகுந்தது! வெள்ளங்கி உருவம்

ஆருக்கும் உரிமை யாம்நவயுகம் பிறந்தது!மூலா தாரங் கடந்து அருண்ஞானப்

பாலாந் தாரை பூமியுட் புகுந்தேஅத்

தாயை எழுப்பி மருட்டும் திரிகுணமா

மாயை விலக்க நவயுக உதயம்!தாமசத்தைக் கரைத்துச் சத்துள் சேர்த்து

ராஜசத்தைக் கரைத்து சித்துள் சேர்த்து

சத்துவத்தைக் கரைத்து இன்பில் சேர்த்து

சச்சிதானந் தபூமியைச் செய்தார் வள்ளலே!சுத்த சிவம்அருட் சத்தி இவர்க்கே

பிள்ளை யான்"" என்னும் மூலவர்!

கால வெளியுள் உய்ந்தே அன்னை

பூமி எழுப்புந் தந்திர போதகர்!சுத்த சிவமும் நல்லருட் சத்தியும்

மெய்க்குள் உய்ந்தே சற்குரு நாதரைப்

பெற்றனர்! மூலா தாரத் தேயவர்

உற்றதும் பூமியில் நவயுக உதயம்!பராபரத் தந்தையும் பராபரை யாந்தாயும்

சிராதா ரத்திறங்கிப் பெற்றனர் பரம்பரமாம்

மெய்க்குருப் பிள்ளையார்! உற்றவர் அடிப்படியில்

உய்ந்தார் பூமியுள்!விடிந் ததே நவயுகம்!

பெறு நீ!

உச்சியில் என் ஞான கங்கை!

நெற்றியில் என் தூய நோக்கு!

தொண்டையில் என் மந்திர வாக்கு!

இருதயத்தில் என் தவத்திரு பூமி!

நாபியில் என் சத்திய தரிசனம்!

நாபியடியில் பார் உன் அதிசயப் பரிமாற்றம்!

முதுகடியில் என் ஜோதி ஸ்வரூபம்!

காலடியில் பூமியைப் புரட்டும் என் திரு நடனம்!பெறு நீ இன்று

என் ஏழ்நிலை மேன்மை!

எழு நீ உயிர்த்து

உன் எழுபடி மெய்யுள்!

இரு நீ உலகில்

வற்றாத என் தயவாய்!

இரு நீ உலகில்

உய்விக்கும் என் மெய்வழியாய்!

இரு நீ உலகில்

மாயா என் அன்புருவாய்!

இரு நீ உலகில்

தெருட்டும் என் அருளொளியாய்!அறு நீ இன்று

உன் சிறுமை!

பெறு நீ இன்று

என் முழுமை!

உறு நீ இன்று

என் பெருமை!உற்றறி உன் அங்கையுள்

சுடரும் என் செம்பொருள்!

உற்றுணர் உன் காலடியில்

சுழலும் என் சக்கரம்!பெறு நீ இன்று

என்னை!

இனி நீ

நானே அன்றி

வேறில்லை!

ஐயமின்றி

நீ என் மெய்

அறிவாயே!

"ஐ யாம்" ஒருமையில்

மாயையாம் இருமையைக்

கரைப்பாயே!"பெரும் ஆள்" என்னில்

"பெறும் ஆள்" நீ

உன்னைக் கரைப்பாயே!

"நானே!" எனும்

எல்லாந் தழுவிய முழுமையாம்

ஒருமையில் எழுவாயே!

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நவயுகமாய்

பூமியில் நீ விடிவாயே!

7. ஜோதி ஸ்வரூபம்

மேலான உண்மை தேற மேலேறு!

பாலான உள்மை ஊறும் ஊர்சேரு!

மாயப் பொய்ம்மை யாவும் தாண்டி

மாயா மெய்ந்நிலை பாரில் நீபாரு!நடவா வெறுங்கல் சடமா யிருந்தாய்!

நடந்த பரிணா மத்தால் மனிதனாய்

எழுந்தாய்! பரிணா மப்பாய்ச் சலில்பார்

எழுகிறாய் மாயா மெய்யாய் விரைந்து!மாயா மெய்ந்நிலையே நின்பேரா இயற்கை!

மாயப் பொய்ச்சுழலில் சிக்கிநீமெய் மறந்தாய்!

மாயுஞ் சாக்காடு மாமாயச் செயற்கை!

மாயான் வாக்காடும் நின்இருதய வாய்மை(மெய்)!நேற்று நடந்ததுன் அதிசயப் பரிமாற்றம்!

இன்று பிறக்குதுன் ஜோதி ஸ்வரூபம்!

கண்டிப்பாய்க் கிடையா தென்ற மாயா

மெய்ந்நிலைநின் கையகம் இன்று ஆஹா!ஆஹா! உம்மெய் மெய்யாகவே மெய்யானதே!

மாயா இயற்கை யாம்பேராப் பெருநிலைஎன்

றாகுமென் இறைவா என்றேங்கிய நம்மனத்தின்

தாகந் தீர்த்தே உய்ந்தார்அருள் வள்ளலின்றே!நினைக்க பயமா யிருக்குஞ் சாவை

நிர்மூ லமாக்குங் கலையால் மாயா

நிலையை
நினக்குக் கற்பித் தாஹா

நினைமே லேற்றினார் வள்ளல் இன்றே!நிராதார ரத்தினகிரி யாம்மாயா மெய்ந்நிலைதான்

ஆறாதாரம் உய்யும்சுப நாள்இன்று பொய்ம்மரணப்

பேயொழியும்! பெய்யும்அருட் தேன்உண்டு நம்சற்குரு

நாயகனார் வெள்ளங்கியுள் நீர்அடங்கி வாழ்வீரே!மரணமுள்ள சிறுவாழ்வை வேரோடு பிடுங்கி

மரணமிலாப் பெருவாழ்வை பூமியிலே நாட்டி

ஆன்மநேய உரிமையால் மாந்தரையே கூட்டித்

தேன்மொழிமந் திரங்கூறி ஜோதியுள்நமைச் சேர்த்தான்!


சுற்றும் பன்னிரண்டும் பதின்மூன்றாம் மையத்துள்

உற்றுப் பராபரமாம் பதிக்குள்தாம் சுழிந்துப்பின்

வழியும் அருண்மெய்வழி பற்றிநின்றால் சாக்காடு

ஒழியும்! மாயாநிலை பெற்றுவாழ்வாய் நீடூழி!பரஞான உச்சி! தூயநோக்க நெற்றி!

குருமந்திரம் முழங்கும் தொண்டைக்குழி! இருதயத்

திருபூமி! சத்திய தரிசனம்உறும் நாபி!

பரிமாறும் அற்புத நாபியடி! ஜோதி

உருவம்பெறும் முதுகடி! நிராதார ஏழ்நிலை

ஆறாதாரம் இறங்கும் குருநாதர் மெய்வழி!சிவமலைச் சிகரத்தே சுடர்விடும் ஜோதி

சிரமேல் தொட்டுப்பின் மெய்க்குள் போந்து

முதுகடி இறங்கிமெய்யை சுடச்சுடச் சுடரும்

புதுவடி வாய்மாற்றி பூமியைப் புரட்டுதே!அருள்வழியும் பால்வீதி மெய்க்குள் உற்றே

மருள்ஒழியத் தேன்வாக்கு வள்ளல் வந்தார்!

முதுகடியில் ஆ!ஜோதி உருவம் தந்தார்!

புதுவடிவ மாயாப்பொன் மெய்யை ஈந்தார்!வன்பின் பள்ளத்தில் கிடந்தகரு மனத்தை

அன்பின் வெள்ளத்தில் அடித்துநன்றே வெளுத்துக்

கற்பூர மாய்இருதய தீபத்துள் கரைத்துயிர்

வற்றாத மாயாஅருட் ஜோதிஉருவந் தந்தான்!உச்சி பிளந்து நெற்றி வெளுத்துத்

தொண்டைத் தேன்வழி திறந்து இருதயத்

திருபூமி உய்த்து நாபியுள் சத்திய

தரிசனங் காட்டி யதன்கீழ் அதிசயப்

பரிமாற்றஞ் செய்து முடிவில் ஜோதி

அருள்வடிவந் தந்தார் சற்குரு வள்ளல்!ஞானக் கூர்வாள் வீசி"மாயை" யைஅறு!

தேனாம் தாரைவிழ "ஐ யாம்"குரு மொழியாய்

"மாயை" கரையும்!நின் எழுபடிமெய் இனிக்க

மாயாப் பெருநிலையில் எழுவாய்நீ உயிர்த்து!

(மாயை=ம்+ஆ+ய்+ஐ=ஐ+ய்+ஆ+ம்=ஐ யாம்=I AM)மேலிருந்து கீழ்வரை நீளும் அருட்பால்வீதி

நீயிருக்கும் மெய்க்குள் காட்டுங் குருவள்ளல்

வாக்குள்ளே ஆழ்ந்து நாளும் தவத்தில்நில்!

சாக்காட்டுப் பொய்த்திரை வீழ ஜோதியுரு!

6. அதிசயப் பரிமாற்றம்

மதிப்பால் பொழிந்து பித்தனென் பேய்மனக்

கொதிப்பைத் தணித்து சித்தனாய் இன்றெனை

அதிசயப் பரிமாற்றஞ் செய்தார் நாயகன்!பால்

நதிஅருட் பிரவாகம் உய்ந்ததே நாபியடி!படத்தை வைத்துக் கும்பிடுமோர் வழக்கால்

கடத்துள் கொட்டும் அருள்நதியாய் வற்றாது

வாழுங்குரு வள்ளற் பரம்பொருளை மறவாதீர்!

ஏழுநிலைச் செல்வம் புகும்மெய்யே வடலூராம்!செத்து மடியும் நம்பொய்க் குரம்பை

சுத்த உடம்பாய் மின்னும் படித்தம்

வெள்ளங்கி அளித்தார் வள்ளல் பெருமான்!நம்

உள்ளெங்கும் நிகழுதே அதிசயப் பரிமாற்றம்!ஈனப் புழுவாய் நெளிந்த கருமை

கூட்டுப் புழுவாய்த் தன்னுட் புகுந்தே

பட்டாம் பூச்சியாய் வெளிவரும் வண்ணம்

நம்மை மாற்றுமே அகத்தவம் திண்ணம்!நற்புதுக் கோட்டை உன்மெய்க் கடமே!

மெய்வழிச் சாலை உன்உயிர்த் தடமே!

புவனைத் தாயார் உன்அகத் துள்ளே!

சிவமய மாவாய் சற்குரு சொற்கேள்!நாபியில் கண்ட சத்திய தரிசனத்தால்

நாபியின் கீழே அதிசயப் பரிமாற்றம்!

குருமொழிப் பாலே வெளுக்குது மெய்யை!

அருளதை உண்டு களிக்குதே உள்ளம்!பரஞான போதமும் தூயநன் நோக்கமும்

வரமாகக் குருபிரான் தேன்மொழித் தீட்சையும்

இருதய பூமியுஞ் சத்திய தரிசனமும்

அருண்மழை இற(ர)ங்கவே அதிசயப் பரிமாற்றம்!நிராதாரப் பராகுண்டலி ஆறாதாரம் விழுங்க

தராதலத் துளேயெங்கும் அதிசயப்பரி மாற்றம்!

பராபரத் துளேபுக்கும் நிர்வாணப் பெருநிலை

நிராமயக் குருவள்ளல் உலகுய்ய அருளினான்!குருமொழி பத்தும் ஒருமூன்றும் அருளி

கருமனம் வெளுத்து இருதயத்தே அடக்கி

இருவினை கொளுத்தித் திருமிகவே அளித்து

கருகும் மெய்க்கே மாயாநிலை தந்தான்!அவத்தின் சிகரமாம் வன்மனத்தைத் திருத்தி

தவத்தின் உச்சியில் சின்மயமாய் நிறுத்தி

பவத்தின் கிடங்காம் மெய்யுடம்பை வெளுத்து

சிவத்தின் சத்திய அன்புருவைத் தந்தான்!புழுவினும் இழிந்த வென்புன்மை மாற்றியருள்

எழுநிலை இறக்கி யென்னைத்தன் போல்மாற்றித்

தழுவியே பொய்ப்புணர்ச்சி போகம் அறவேயெனை

அழுத்தியே மெய்ப்புணர்ச்சி யோகந் தந்தான்!சிற்றறிவின் பள்ளத்தில் கிடந்த சிறியேனை

உற்றெழுப்பி வெல்லத்தின் இனிக்கும் குருமொழியைக்

கற்பித்தே சித்தத்தைத் திருத்தி அருள்விளக்கி

சிற்பரமாய்த் தன்போல்எனை மாற்றி விட்டான்!கன்மனத்தன் என்னை வெண்மனத்தன் ஆக்கிக்

கற்பூரமாய் அதனை இருதயத்திற் கரைத்து

நல்லருள் எழுமை என்மெய்யுள் இறக்கித்

தன்னுரு போன்றே என்னுருவை மாற்றினான்!மாயுந் தேகத்தை மாயா மெய்யாய்

மாற்றும் யோகத்தை ஆகா வள்ளல்

மானுடம் உய்யவே ஈங்கே தந்தான்!

மாதவம் வெல்லவே தானே வந்தான்!தயாநாயகப் பரம்பொருள் தனித்தலைமைப் பெரும்பொருள்

பராபரமாம் அரும்பொருள் இனித்திடுமோர் அருட்பொருள்

தராதலத்தே தான்இற(ர)ங்கியே மாயாநிலை அருளுதே!

நிராதாரத் தரமதாய்நம் ஆறாதாரம் மாறுதே!அருட்புயல்தான் வீசுது கருணைமழை பொழியுது!

அறிவுமின்னல் மின்னுது தயவாய்இடி இடிக்குது!

புயலில்வினை நசியுது மழையில்மனங் கரையுது!

புத்திதெளியுது மின்னலில் இடிதிறக்குது இருதயம்!பிறந்தால் இறப்பதே விதியென்ற பொய்யை

அறுக்கும் அறவாழி அளித்தார் வள்ளல்!

சிரமேல் எழுநிலை சிரங்கீழ் இறக்கி

அருட்பால் பொழிவித் தெனைமேல் ஏற்றினார்!நிராதாரம் ஆறாதாரம் சந்திக்கும் மெய்வழியைச்

சிராதாரம் திறந்துப்பின் அறுபடியுள் இறக்கித்தன்

அவதார அருள்வடிவை மெய்க்குள்ளே புகுத்திஎனைத்

தவமலை மேலேற்றி மாயாநிலை தந்தான்!நள்ளிரவில் உள்ளக் குகையுள் அருட்குரு

மந்திரத்தை
முழக்கி வன்மனம் அடக்கி

சித்தத்தில் இருதய அன்பாய் நிறைந்தான்!

கும்மிருட்டில் பட்டப் பகல் வெளிச்சம்!

5. சத்திய தரிசனம்

உந்திக்குள் இற(ர)ங்கினார் நாகை நாதர்!

பந்திக்கும் இருவினை அற்றுப் போயின!

சத்திய தரிசனம் பெற்றுக் கொண்டோம்!

வித்தக வள்ளலின் யோகம் தேர்ந்தோம்!மூவரும் திரண்ட இருதய பூமியின்

தூய்மை இற(ர)ங்குது கமல நாபியுள்!

யாவருஞ் சத்திய தரிசனம் பெறவே

வாய்மை வள்ளலின் குருமொழிப் பெருக்கே!தொந்திக்குள் குதித்தார் போக நாதர்!

வஞ்சிக்கும் வல்வினை விட்டுப் போயின!

என்றென்றும் விளங்கும் சத்திய தரிசனம்

சித்திக்கும் நல்வரம் ஈந்தார் குருபிரான்!உந்திக்குள் போந்தார் வள்ளல் நந்தி!

வன்புக்குள் தோய்ந்த கன்மங் களோட

அன்புக்குள் ஆழ்ந்த சத்திய தரிசனம்!

புந்திக்குள் போதி மின்னலாய்க் குருபிரான்!மூவரின் ஒருமையாம் அருண்மயத் திருமூலம்!

பூமியின் இருதயமாம் பரம்பொருட் கருவூலம்!

நாபியுள் இறங்குமோர் அருட்பெரு வல்லபம்!

பாவநோய் அறுக்குமோர் சத்திய தரிசனம்!பொய்க்கும் கடந்தான் மெய்யாய் மினுக்க

மெய்யோன் கடந்தான் உந்தியில் இனிக்க!

குருமொழி மலைத்தேன் தொந்தியில் செரிக்க

மருண்மயக் கறுக்குஞ் சத்திய தரிசனம்!மெய்வழி காட்டும் வள்ளலென் மந்திர

மெய்ம்மொழி
தேக்கிப் புந்தியில் பொய்ம்மருள்

நீக்கியுன் உந்தியுள் பஞ்சமா பாதகம்

போக்கியென் சத்திய தரிசனங் காண்!மோனமாய்க் கேளு தயாபரத் தேன்மொழி!

ஞானவாள் நீட்டும் பராபர மேனிலை!

உந்திக்குள் போந்துபா சங்கள் வெட்டு!

சந்திப்பாய் நீயுன் சத்திய தரிசனம்!தாமச முடக்கம் போய்சத்தின் இருப்பு!

ராஜச மூர்க்கம் போய்சித்தின் விளக்கம்!

சத்துவ ஆணவம் போய்ஆண்டவர் இன்பம்!

சச்சிதா னந்தம் ஆம்சத்திய தரிசனம்!மெய்யோன் மாயான் நாபிக்குள் உய்ந்தே

பொய்யோன் ஆணவப் பேயனை மாய்த்தான்!

இருவினை தீர்த்தான் பாசமும் அறுத்தான்!

குருபிரான் ஈந்தான் சத்திய தரிசனம்!அவத்தின் கிடங்காய்த் திரிந்த மனத்தைத்

தவத்தே கிடத்தி அடங்க வைத்தார்

வள்ளல் பெருமான்! உந்தித் தாமரை

உள்ளே அளித்தார் சத்திய தரிசனம்!