என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Saturday, April 26, 2008
புரிதல்
வானம்
வார்த்தைகளால்
விவரிக்க இயலாதவாறு
விரிந்து கிடக்கிறது.
வாயடைத்துப் போய்ப்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
சின்னஞ்சிறு சிட்டொன்று
குறுக்கே
வேகமாய்ப் பறக்கிறது.
சிறகுகள்
எனக்கும் இருப்பது
சட்டென
நினைவில் வர
உடனே
அவை விரிய
வானம் புரிகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment