மனமே!
நீ
இருதயக்கடலில் சேர வேண்டிய
ஆறு
என்பதை மறந்து
"ஆறு(6)" என்ற மமதையில்
"ஐ(தனித் தலைமை நாயகன்)" மறந்து
ஆணவ ஆர்ப்பாட்டம் போடுகிறாய்.
உன் ஆட்டம் முடியுமுன்
"ஐ"யை நினைவு கூர்ந்து
இருதயத்தில் அடங்கியே
நீ
ஆறு மனமே ஆறு.
"ஐ"யாம் ஆண்டவன் கட்டளை
இதுவே.
எனவே
அறிந்தடங்கி
நீ
ஆறு மனமே ஆறு.
ஆறிப் பின் எழு
எழுமையாம் ஒருமையில்.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்