Wednesday, May 7, 2008

செதுக்கல்

கல்லுக்கும் சிலைக்கும் இடையே
உளியின் கூப்பிடு தூரத்தில்
சிற்பியின் கனவு

கல் மட்டுமல்ல
செதுக்கப்படுவது
சிற்பியுந்தான்

உடம்பெங்கும் இரணங்களோடு
உயிர்த்தது கல்
சிலையாக

சிற்பியின் பிரசவ வேதனை
உளி வழியே கல்லில் பரவப்
பிறந்தது சிலை

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்