பருப்பொருளில் உறங்கும்மெய்க் குருப்பொருள்தான் விழிக்கும்!
அருட்பொருளாந் தன்னம்மை பரம்பொருளாந்தன் தந்தை
இருவரையுந் தன்னகத்துள் பழம்பொருளாய்த்தான் தெளியும்!
இருள்விடிய இப்புவியில் நவயுகத்தை எழுப்பும்!
சிவமே பொருளெனச் சித்தந் தெருட்டி
தவமேன் மலைமேல் என்னை ஏற்றிஎன்
அவஞ்சேர் இருவினை எல்லாங் கரைத்து
நவமாய் ஒளிர்மெய் தந்தார் சற்குரு!
அக்குருவும் இக்குருவும் எக்குருவுஞ் சாராமல்
'உ'க்குருவாய் உம்மில்வாழ் மெய்க்குருவைச் சார்வீரே!
பொய்க்குருமார் மடஞ்சேர்ந்து கண்ணிழந்தே வீழாமல்
மெய்யுடம்பாம் மடத்துள்ளே சற்குருவைச் சேர்ந்துய்வீர்!
(தமிழுக்கே உரித்தான 'உ'கரச் சுட்டு உம்முள்ளேயே உறையும் உத்தம மெய்க்குருவைச் சுட்டுகிறது!)
அல்லாவுள் அ'ரு'ளம்மை அடக்கம்! அ'ரு'ளம்மை
அல்லாவின் நல்லாக்கம்! அ'ரு'ளே நின்வடிவம்!
அல்லாவே நின்மூலம்! இருவரும் ஒன்றிடும்நின்
இல்லாகும் இருதயமே நாயக நபிமையம்!
இடவலமும் முன்பின்னும் மேல்கீழும் இருமையெலாம்
இருதயத்தே ஒன்றுவித்து நடுநிலையாய் இருக்குமொரு
குருமெய்யுள் ஒன்றிநின்று படுகுழியுள் வீழாமல்
குமரராய் என்றென்றும் இன்புற்று வாழ்வீரே!
இருக்கும் இடத்திலேயே சற்குரு நாயகர்!
இல்லாம் உளத்தேதான் அமர்ந்தொளிர் ஜோதியர்!
உடம்பாம் கடத்திலேயே நல்லருட் போதகர்!
உள்ளே புகுந்தாலே துரிசறு தூயவர்!
பெருமடத்தால் மெய்த்திருமடம் விட்டெங்கும் அலைந்தே
கருமனத்தை வெளுக்காமல் செத்தொழியுங் கூட்டம்!
ஒருமையுடன் மெய்ம்மடத்துள் நற்றவமா மலைமேல்
குருவாய்மை உணர்ந்தேநீ என்றென்றும் வாழ்க!
இடத்தே சத்தியும் வலத்தே சிவமும்
கடத்தே கண்டு சிரத்தே இருவரும்
ஒன்றும் தலத்தைத் தாண்டி ஏழ்நிலை
வென்ற தவத்தை அளித்ததே குருவருள்!
திடமெய்யைக் கரைக்குந் திரவமான அருவகுரு
திடமெய்யாய் உறைவார் உருவத்துள் தான்ஒளிந்தே!
மனமினிக்க உரைப்பார் மெய்ஞ்ஞானத் திருமந்திரம்!
மனமடங்கிக் கரையுதே மெய்குருவருட் கிருபையால்!

No comments:
Post a Comment