Quote:
உங்கள் கவிதைகளின் பிடிபடாத அர்த்தங்களால்தான் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை நாகரா அவர்களே. அறிவுகுறைந்த எங்களுக்கு புரியும்படி கவிதை எழுதினால் ரசிக்க முடியும் நாகரா அவர்களே. |
உம்மில் ஓடும் வாசியில்
கவனம் பிடிக்க
அன்பெனும் சிவா
ஆர்க்கும் சமமாய்
அளந்த அறிவின்
உண்மை உமக்குப்
புரியும் சிவா!
என் கவிதைகள்
மூளையின் மறை கழன்ற
பித்தனின்
அர்த்தமற்ற பிதற்றல்களே!
அவற்றை ரசிப்பதிலும்
உயிர் மூச்சாம்
உம் வாசிக் கவிதையை ரசிப்பீர்.
வாசிக்குப் பின்னூட்டமாய்
உம் கவனம் இடுவீர்.
உமக்குள் உறையும்
அன்பெனும் சிவா
அங்கையில் கனியெனப்
பிடிபடும் புரியும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
உம் அறிவின் ஊற்றாம் வாசியைப் போற்றி வாழ்வீர்!
நாசியில் ஓடும்
வாசியில் கவனம் நிற்க
சிவாவின் அருள்
உம்மை
அமரருள் உய்க்கும்
ரு(Ruh, Holy Spirit, Adishakthi)எனும் அல்லாவின் அருண்மூச்சு
இதயமென்னும் இரத்த இயந்திரத்தை
இருதயமென்னும் தயவின் இருப்பாம்
அன்பெனும் பொன்னாய்ப் புடம் போடும்
No comments:
Post a Comment