மெய்ஞ்ஞானிகளால் மட்டுமே
அவிழ்க்க முடிந்த
மர்ம முடிச்சு
பிறந்தவர் எல்லோரும்
மேலாம் மெய்யுண்மையை மறந்ததால்
தாமே ஏற்றக் கட்டாய தண்டனை
எவருமே பொய்யை நிராகரிக்காமல்
ஏற்றுக் கொண்டதால்
வந்த இலவச அவலம்
பெருவாழ்வில் நாட்டமின்றேல்
கிடைப்பது இதுவே
வந்துவிட்டால் போவதொன்றே விதி
என்ற மனப் பிரமையின் சதி
திருடனாய் உள்ளுள்ளே ஒளிந்திருக்கும்
அருட்பெருங்கடவுள் உள்ளிருந்தெழும் வரை
வருவான் எமனாம் இவ்வெளித் திருடன்
உயிர்மெய் ஒருமையுணர்ந்தால்
சரியும் பிணமில்லை
திரியும் பேயில்லை
இலங்கைப் பெண்ணாம் நல்லவளே!
இல்லென்றே உன் அங்கையில்
நெல்லிக் கனி போல் உள்ளதாம்
மேலாம் உண்மையினைப்
பேரின்பப் பெருவாழவை
நித்திய ஜீவனை
நல்ல பெண்ணாம் நீ மறந்ததாலே
இலம் கையென்றே உன்
வல்லமை அழிந்தே
மரணப் பொய்யன் கையில் மாட்டினாய்.
நல்லவளே! வல்லவளே!
நல்லிலங்கைப் பெண்ணே!
உனக்கே இவ்வுண்மை
உறைக்கவே
உன்னைக் கொத்தும்
நல்ல நாகம் நானே!
என் வாக்கில் நஞ்சிருந்தால்
என்னை மன்னிப்பாயே
நல்ல பெண்ணாம் நீயே!
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மரணம்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment