துயரங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் தூய்மையில் நிலை கொள்ள
சுமைகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சுகத்தில் நிலை கொள்ள
சலனங்களிலிருந்து நழுவிய கவனம்
காதலின் சந்தோசத்தில் நிலை கொள்ள
மனச் சோர்வுகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் மகிழ்ச்சியில் நிலை கொள்ள
வசதிகளிலிருந்து நழுவிய கவனம்
காதலின் உயிர்மையில் நிலை கொள்ள
காமப் பிணைப்பிலிருந்து நழுவிய கவனம்
காதலின் நிலையான இன்பத்தில் நிலை கொள்ள
காதலின் விந்தையில்
காதலின் வியப்பில்
நீ
இலயித்திருக்கும்
ஒருமித்திருக்கும்
உன் புது அவதாரம்
நன்று தங்காய்!
கவனமாயிரு
கவனந்திரும்பி
உன் அவதார நோக்கம்
பங்கமாகாமலிருக்க
அதி கவனமாயிரு
கவனம்
எல்லாந் தழுவிய
காதலெனும் ஒருமையில்
முழுமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
அவ்வாறு நிற்றலே
உன் அவதார நோக்கம்
கவனம்
உன்னை இவ்வாறு
எச்சரித்து
அச்சுறுத்தி
நச்சரவு செய்வதே
நாகமென் அவதார நோக்கம்
கவனம்
காதலே வாழ்வு
காதலெனும் ஒருமை
நழுவிய கணமே
மரணம்
Monday, April 28, 2008
காதல்.....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கவிதை..
பின்னூட்டங்களுக்கு கவிதைகளையே எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்...
நட்புடன்,
கோகுலன்.
உம் பாராட்டுக்கு நன்றி கோகுலன்
Post a Comment