Monday, April 28, 2008

கோடுகளுக்குள்

சிற்றெறும்புகள் கூடக்
கோடுகளைத் தாண்டிக்
கோடுகளைத் தாண்டித்
தரையில்
ஊர்கின்றன

மனிதர்களோ
கோடுகளைத் தாண்டினால்
தீ மூளுமென்று
பயந்து
கோடுகளுக்குள்
குந்திக் கிடக்கிறார்கள்

யாரோ
எதற்கோ
என்றோ
கிழித்த கோடுகளை
ஏன் தாண்டக் கூடாது
என்ற விவேகக் கேள்வியையும்
சந்திக்க பயந்து

கோடுகளுக்கு வெளியே
புதியதோர் உலகம்
காத்துக் கிடக்கிறது

கண்டுபிடிக்க்கப் படாமல்

2 comments:

கோகுலன் said...

நாகராஜன்,

மிகவும் ரசித்தேன் இந்தக்கவிதையை..

கோடுகளுக்கு வெளியே
புதியதோர் உலகம்
காத்துக் கிடக்கிறது-- உண்மை..

நட்புடன்,
கோகுலன்.

I AM naagaraa said...

உம் ரசிப்புக்கு நன்றி கோகுலன்